2009-09-08 16:55:44

இந்தோனேசிய தலைநகரின் தெருக்களில் பிச்சை எடுப்பது தடை


செப்.08,2009 இந்தோனேசியா விடுதலை அடைந்ததற்குப் பின்னர் முதன்முறையாக அந்நாட்டுத் தலைநகரின் தெருக்களில் பிச்சை எடுப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று சொல்லி பிச்சை எடுப்பதற்கு அந்நாட்டு முஸ்லீம் குருக்கள் அவை தடை விதித்துள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவில் முக்கியமான காலங்களில், குறிப்பாக ரம்ஜான் மாதத்தில் பிச்சை எடுப்பது, வழக்கமாக இடம் பெறும்.

தற்சமயம் ஏறத்தாழ 1500 பிச்சைக்காரர்கள் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

தர்மம் எடுப்பவர்கள் உண்மையிலேயே ஏழைகள் அல்ல என்றும் திட்டமிட்ட குற்றக் கும்பல் தனிப்பட்டவர்களைப் பயன்படுத்தி இவ்வாறு செய்ய வைக்கின்றது என்றும் இசுலாம் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.