2009-09-05 17:08:38

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வரும் வேளை, அது குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனத் தலத்திருச்சபை அரசை விண்ணப்பித்துள்ளது


செப்.05,2009 பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வரும் வேளை, அது குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனத் தலத்திருச்சபை அரசை விண்ணப்பித்துள்ளது.

கடந்த வாரத்தில் அந்நாட்டின் வடமேற்கு நகரமான கெட்டாவில் 5 கிறிஸ்தவர்களும் கடந்த ஜூலை இறுதியிலும் ஆகஸ்ட் துவக்கத்திலும் 11 கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர். சுமார் 100 கிறிஸ்தவ வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்த வன்முறைத் தாக்குதல்கள் குறித்து இதுவரை எந்தவித விசாரணைகளும் நடத்தப்படவில்லையென்று பாகிஸ்தான் ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் உலக கிறிஸ்தவ சபைகள் அவையும், அந்நாட்டின் தேவ நிந்தனை சட்டம் திரும்பப் பெறுமாறு அழைப்பு விடுத்ததோடு, சிறுபாந்மை மதத்தவர் அனைவரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படுமாறும் கேட்டுக் கொண்டது.

இந்த வன்முறைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் தலிபான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுகின்றது.



 








All the contents on this site are copyrighted ©.