2009-09-05 17:05:16

இந்தியாவில் கல்வியறிவின்மையை அகற்றுவதற்கான அரசின் முயற்சிகளுக்குக் கத்தோலிக்கப் பள்ளிகள் ஆதரவு வழங்க அதிகாரிகள் வலியுறுத்தல்


செப்.05,2009 இந்தியாவில் கல்வியறிவின்மையை அகற்றுவதற்கான அரசின் முயற்சிகளுக்குக் கத்தோலிக்கப் பள்ளிகளும் ஆதரவு வழங்குமாறு கர்நாடக மாநில கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

மங்களூர் கத்தோலிக்கக் கல்வி கழகம் சிறப்பித்த இந்திய ஆசிரியர் தின விழாவில் உரையாற்றிய அரசு அதிகாரிகள், மாணவர்களைப் பொறுப்பான குடிமக்களாக உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை என்பதைச் சுட்டிக் காட்டினர்.

இந்தியாவில் எழுத்தறிவு நிலையை நூறு விழுக்காடாகக் கொண்டு வருவதற்கு அரசு விரும்புகிறது என்றும், நாட்டில் எழுத்தறிவின்மையை அகற்றுவதற்கான அரசின் முயற்சிகளோடு கத்தோலிக்கப் பள்ளிகளும் ஆசிரியர்களும் சேர்ந்து செயல்பட வேண்டுமென்றும் கல்லூரி கல்விப் பிரிவின் இணை இயக்குனர் டி.ஹைச். எரானா அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், புகழ் பெற்ற ஆசிரியருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் சிறப்பிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.