2009-09-04 16:26:36

செவித்திறன் குறைவுள்ளவர்களுக்கென சிறப்பு பணி 


செப்.04,2009 வாஷிங்டனில் உள்ள கல்லௌடெத் பல்கலைக்கழகம் செவித்திறன் குறைவுள்ளவர்களுக்கென சிறப்புப் பாடத்திட்டத்தை நடத்தி வருகிறது. சைகை மொழியின் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

பென்சில்வேனியாவில் உள்ள ஹாரிஸ்பர்க்  புனித பேட்ரிக்  ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்திரு தாமஸ் ரொஸ்மன் இந்த சைகை மொழியைச் சிறப்பான முறையில் கற்று வருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஹாரிஸ்பர்க் மறைமாவட்டம் பலவகையில் உடல்திறன் குறைந்தவர்களை மையப்படுத்திய பணிக்குழு ஒன்றை ஆரம்பித்தது. பொதுநிலையினர் பலர் இந்தக் குழுவில் இணைந்து சைகை மொழியைக் கற்றுக் கொண்டு செவித்திறன் குறைந்தவர்களுக்கு பலவகையில் உதவி செய்கின்றனர்.

பங்குத்தந்தை ரொஸ்மன் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின்படி செவித்திறன் குறைந்தோரில் 96 விழுக்காடு திருப்பலி காண்பதில்லை எனவும், ஒப்புரவு அருட்சாதனம் பெறுவதில்லை எனவும் கண்டறிந்தார். அவர்களுக்கு உதவும் வகையில் தானும் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களது அருட்சாதன வாழ்வு இன்னும் சிறப்பாக அமைய பணி செய்யப் போவதாகக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.