2009-09-02 17:19:38

திருத்தந்தையின் புதன்  மறைபோதகம்


திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல்   லிருந்து ரோமை திரும்பி வந்து, இன்று தான் மறையுரையை வழங்கினார்.
வழக்கம்போல் இத்தாலியில் மறையுரையை ஆரம்பித்த திருத்தந்தை, ஆங்கிலத்தில் உரையாற்றும்போது, ஆங்கிலம் பேசுகின்ற அனைத்து திருப்பயணிகளையும், சிறப்பாக, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நைஜீரியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து வந்திருந்தோரை வரவேற்றார். தூய ஆவியின் பணியாளர்களையும் ஜெபம் பயிலும் இல்லத்திலிருந்து வந்திருந்த இளையோரையும் வாழ்த்தினார்.
அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய  உரை RealAudioMP3

 செப் 2, 2009 - இன்று நமது மறை உரையில் இடைப்பட்ட நூற்றாண்டில் வாழ்ந்த குளுனியின் புனித ஓடோ என்ற ஒரு பெரும் துறவியைப் பற்றி எடுத்துரைக்கிறோம். புனித பெனெடிக்ட் நிறுவிய சபையின் குறிக்கோள்களால் ஈர்க்கப் பெற்ற புனித ஓடோ அதே சபையில் சேர்ந்து, குளுனியில் இரண்டாம் மடத் தலைவரானார். ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் திருச்சபையின் மறுமலர்ச்சியை முன்னின்று வழி நடத்திய குழுக்கள் குளுனியில் இருந்தன. புனித ஓடோ தன் சொல்லாலும், வாழ்வாலும் இந்த மறுமலர்ச்சி ஐரோப்பா முழுவதும் பரவ உறுதுணையாய் இருந்தார். உலகினின்று விலகி மடங்களில் வாழ்வது, ஆழ்நிலை தியானம், மறு உலக வாழ்வில் ஈடுபாடு போன்ற கருத்துகள் அவர் எழுத்துக்களில் வெளிப்பட்டன.

 RealAudioMP3 புனித ஓடோ நற்கருணையின் மேல் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தார். நற்கருணையில் இருக்கும் இறைவனின் பிரசன்னம் அவரது விசுவாசத்தின் மையமாய் அமைந்தது. இந்த விசுவாசத்தின் அடிப்படையில் குருக்கள் தங்கள் வாழ்வைச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். புனித ஓடோ வாழ்ந்த காலம் மிகுந்த கலவரங்கள் நிறைந்த காலம். அந்நிலையில், இந்த புனிதர் தனது எளிய வாழ்வாலும், ஆழ்நிலை தியானத்தின் வழியாக தான் அடைந்த இறை அனுபவத்தாலும் ஒரு மாபெரும் எடுத்துகாட்டாக விளங்கினார்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.