2009-09-02 10:22:27

செப்.2 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை 


1666 ஆம் ஆண்டு செப் 2 லண்டனில் பெரியதொரு தீ விபத்து நிகழ்ந்தது. ஒரு ரொட்டிக்கடையில் ஆரம்பித்த தீ, புனித பவுல் ஆலயம் உட்பட பல கட்டடங்களைத் தீக்கிரையாக்கியது.

1945 ஆம் அண்டு இதே நாள் டோக்கியோ வளைகுடாவில் ஜப்பான் அமெரிக்காவிடம் சரண் அடைந்ததால், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
 அதே ஆண்டு அதே நாள் வியட்னாம் தலைவர் ஹோ சி மிங் ப்ரென்ச் நாட்டவரிடமிருந்து தங்கள் நாடு விடுதலை பெற்றதென அறிவித்தார். 24 ஆண்டுகள் கழித்து 1969 செப் 2 ஆம் நாள் ஹோ சி மிங் தனது 79 ஆம் வயதில் காலமானார்.







All the contents on this site are copyrighted ©.