2009-09-02 16:15:49

இலங்கை இராணுவத்தினர், ஆயுதம் ஏதுமின்றி இருந்த தமிழர்களைக் கொலை செய்திருப்பதன் மூலம் அவர்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளார்களா? என்பது குறித்த புலன்விசாரணை நடத்தப்பட ஐ.நா. மூத்த அதிகாரி அழைப்பு


செப்.02,2009 இலங்கை இராணுவத்தினர், ஆயுதம் ஏதுமின்றி இருந்த தமிழர்களைக் கொலை செய்திருப்பதன் மூலம் அவர்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளார்களா? என்பது குறித்த புலன்விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நா. மூத்த அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிபிசி தொலைக்காட்சி அலைவரிசை 4-ல் காட்டப்பட்ட ஒரு காட்சியில், இராணுவ உடை அணிந்த ஒருவரால் தமிழ் இளைஞர்கள், நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்த உண்மையைக் கண்டறிவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆதரவுடன், சர்வதேச மட்டத்தில், முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. வின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான சிறப்பு அதிகாரி பிலிப் அல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சையை எழுப்பியுள்ள இந்தக் காடசி உண்மையல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அல்ஸ்டன் மேலும் கூறினார்.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசு இது குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும், அவ்வாறு செய்வது அந்நாட்டு அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த காலங்களில் வாழாமல் எதிர்காலத்தை நோக்க வேண்டியதே இலங்கைக்குத் தற்போது தேவைப்படுகின்றது என்று அரசுத் தலைவர் மகிந்த இராஷபக்சே கூறியதாக ஊடகங்கள் கூறுகின்றன.

 








All the contents on this site are copyrighted ©.