2009-09-01 16:57:46

வருகிற நவம்பர் 19 முதல் 21 வரை வத்திக்கானில் காது கேளாதவர்களை மையப்படுத்திய சர்வதேச மாநாடு


செப்.01,2009 வருகிற நவம்பர் 19 முதல் 21 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கின்ற நலவாழ்வு குறித்த 24 வது சர்வதேச மாநாட்டின் நிகழ்ச்சித் திட்டங்களை திருப்பீட நலவாழ்வுத் துறைத் தலைவர் பேராயர் சிக்மண்ட் ஜிமோஸ்கி திருத்தந்தை 16ம் பெனடிக்டிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி விளக்கிய பேராயர் ஜிமோஸ்கி, காது கேளாதவர்களை மையப்படுத்தி நடைபெறவிருக்கின்ற இவ்வுலக மாநாட்டிற்கு “திறக்கப்படு, திருச்சபையின் வாழ்வில் காது கேளாதவர்” என்பது தலைப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் கூறினார்.

திருச்சபையின் பல்வேறு அப்போஸ்தலத்துவப் பணிகளில் காது கேளாதவர்களுக்கு முக்கியத்துவமும் ஆதரவும் அளிப்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் பேராயர் கூறினார்.

உலகில் மூன்று கோடியே அறுபது இலட்சம் பேர் காது கேளாதவர்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.