2009-09-01 16:59:50

தென்னாப்ரிக்காவில், அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருச்சபை மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது, அமெரிக்க ஆயர்கள் பிரதிநிதிகள் குழு


செப்.01,2009 தென்னாப்ரிக்காவில், அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருச்சபை மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக அந்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஆயர்கள் பிரதிநிதிகள் குழு கூறியது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கானக் காரணத்தை விளக்கிய ஆயர் ஜான் ரிக்கார்டு, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருச்சபை ஆப்ரிக்காவுக்கென ஒருமைப்பாட்டு நிதி சேகரிப்பு திட்டத்தைத் தொடங்கியது பற்றியும் குறிப்பிட்டார்.

ஆப்ரிக்கக் கண்டத்தின் வறுமை மற்றும் நோய் காரணமாக இதனைச் செய்யவில்லை, மாறாக, அக்கண்டத்தில் திருச்சபை வளர்ந்து வருவதை முன்னிட்டு அதற்கு உதவும் நோக்கத்தில் இத்திட்டத்தை ஆரம்பித்ததாக விளக்கினார்.

வருகிற ஞாயிறு வரை தென்னாப்ரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஆயர்கள் பிரதிநிதிகள் குழு, ஆப்ரிக்கக் கண்டத்தில் மிகவும் வளர்ச்சியடைந்துள்ள தென்னாப்ரிக்கா, அக்கண்டத்தின் பிற பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று கூறியது.








All the contents on this site are copyrighted ©.