2009-09-01 17:07:06

கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் திட்டமிட்ட குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு அதிகமான முயற்சிகள் தேவை, ஐ.நா


செப்.01,2009. கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் திட்டமிட்ட குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு அதிகமான முயற்சிகள் தேவை என்று ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.

இப்பகுதியிலுள்ள பல நாடுகளில் திட்டமிட்ட குற்றங்கள் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றன என்றுரைக்கும் இவ்வறிக்கை, இவற்றுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு எந்தவிதமான யுக்திகளோ, கொள்கையோ, சட்டமோ அல்லது தண்டனையோ இப்பகுதியின் எந்தவொரு நாட்டிலும் இல்லை என்று தெரிவிக்கிறது.

இரண்டாயிரமாம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட “திட்டமிட்ட குற்றங்களை தடுப்பது” குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தை இதுவரை ஏறத்தாழ 150 நாடுகள் அமல்படுத்தியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.