2009-09-01 17:01:48

கத்தோலிக்கக் குருவுக்கு பொது மன்னிப்பு வழங்க வியட்நாம் மறுத்துள்ளது


செப்.01,2009. வியட்நாம் அரசின் பொது மன்னிப்பு நடவடிக்கையில் மனித உரிமை நடவடிக்கையாளரான கத்தோலிக்கக் குரு ஒருவரை இணைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

வியட்நாமின் தேசிய தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இப்புதனன்று கடைபிடிக்கப்படும் இவ்வாண்டு தேசிய தினத்தன்று ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு விடுதலை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

ஜனநாயக ஆதரவு கட்சியை உருவாக்குவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2007ம் ஆண்டில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் அருள்திரு நுகுயென் வான் லி.

இக்குரு, தனது குற்றத்திற்கு உண்மையாகவே மனம் வருந்தவில்லை என்பதால் தற்போதைய அரசின் பொது மன்னிப்பு நடவடிக்கையில் இவர் விடுதலை செய்யப்படமாட்டார் என்று பொதுநலப் பாதுகாப்புத் துறையின் உதவித்தலைவர் லி தெ தியெம் அறிவித்ததாக ஊடகங்கள் கூறின.








All the contents on this site are copyrighted ©.