2009-08-27 13:33:55

வரலாற்றில் ஆகஸ்ட் 28 புனித அகுஸ்தீன்


வட ஆப்ரிக்காவின் ஹிப்போ நகரின் ஆயரும் மறைவல்லுனருமாகிய புனித அகுஸ்தீன், 354ம் ஆண்டு முதல் 430ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர் இளமையில் சிற்றின்பத்திலும் மனிக்கேயம் என்ற தப்பறையான கொள்கையிலும் ஊறிப்போயிருந்தவர். இவரது தாய் மோனிக்காவின் முப்பது வருட தொடர் செபத்தால் மனந்திரும்பினார். இவர் தனது 30வது வயதில் மனிக்கேயத் தப்பறை தவறு என சிறிது சிறிதாக உணர்ந்த போது மிலான் நகர புனித அம்புரோசியாரின் அரவணைப்புக்குள் வந்து சேர்ந்தார். பின்னர் அவரது வாழ்க்கையே மாறியது. ஞானதீட்சை பெற்றார். என்றுமே அழகின் முழுமையானவரும் எல்லாக் காலங்களிலும் அழகே உருவானவருமான அருட்பெருஞ் ஜோதியே இறைவா, உம்மைப் புரிந்து அன்பு செய்வதற்கு எவ்வளவு பின்தங்கிவிட்டேன். நீர் என்னுள் குடிகொண்டிருந்தீர். நானோ அழகிகளிடம் மட்டுமே என் இதயத்தைப் பறி கொடுத்தேன். இப்போது உம்மீது மட்டுமே எனக்குப் பசியும் தாகமும் இருக்கின்றன. நீர் என்னைத் தொட்டதுதான் தாமதம். நீர் தரும் பேரமைதிக்காக உருகி நிற்கிறேன் என்று உள்ளம் உருகச் செபித்தவர்.

ஆகஸ்ட் 28, 1349 - கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜெர்மனியின் மயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1511 – போர்த்துக்கீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர்.

1891 - பிரித்தானியத் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் இறந்தார்.

1990 – இராக், குவைத்தை தனது புதிய மாகாணமாக அறிவித்தது.

1991 – சோவியத் யூனியனிடமிருந்து உக்ரைன் விடுதலை பெற்றது








All the contents on this site are copyrighted ©.