2009-08-27 20:22:27

பொருளாதார நெருக்கடிக்குப் பேராசையே காரணம் ,கர்தினால் .270809 .


உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பேராசையே காரணம் என்கிறார் மணிலாவின் பேராயர் கர்தினால் கெளடென்சியோ ரோசாலஸ் .

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் சுற்றுமடலுக்கு விளக்கம் அளித்த பேராயர் முழுமனித குடும்பமும் முழு மனிதனும் வளரவும் கிறிஸ்தவ மதிப்பீடுகளின் அடிப்படையில் பொருளாதாரம் அமையவும் திட்டமிடப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் . வங்கிகளும் , வாணிப மையங்களும் , அகில உலகப் பொறுளாதார நிறுவனங்களும் அவர்களுடைய திட்டங்களில் சராசரி மனிதனை மையப்படுத்தினால் உலகப் பொருளாதார நெருக்கடி வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார் . இந்தப் பொருளாதார நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்காக அல்ல , மக்கள் சேவைக்காகவே இயங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் . லாபம் என்பது குறிக்கோள் அல்ல , அது செயல்பாடுகளின் விளைவாக இருக்கவேண்டும் எனவும் கர்தினால் ரோசாலஸ் தெரிவித்துள்ளார் .2008 ஆம் ஆண்டில் விளைந்த பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் பணிசெய்த 1 கோடிப் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கர்தினால் தெரிவித்துள்ளார். திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையாகிய உண்மையில் அன்பு என்பதன் அடிப்படையில் பொருளாதாரத் திட்டங்களை மாற்றி அமைப்பதே பொருளாதார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு வழி எனத் தெரிவித்துள்ளார் கர்தினால் கெளடென்சியோ ரோசாலஸ் .








All the contents on this site are copyrighted ©.