2009-08-27 20:20:30

சமயக்கல்விக்கு வெனீசூலா நாட்டில் ஹூகோ சாவஸ் தடை . 270809 .


சமயக்கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு வெனீசூலா நாட்டின் தலைவர் ஹூகோ சாவஸ் தடை விதித்துள்ளார் . வெனீசூலாவின் கல்வி அமைச்சகம் இயற்றியுள்ள புதிய சட்டத்தில் தனியார் கல்விக்கூடங்களிலும் , அரசு நடத்தும் கல்விக்கூடங்களிலும் மதக்கல்வியை பாடத்திட்டங்களில் சேர்க்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது . இந்தச் சட்டம் இயற்றியுள்ள முறை சட்டத்துக்குப் புறம்பானது என்றும் இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் கரகாஸ் மறைமாவட்டக் கர்தினால் ஜார்ஜ் லிபராட்டோ யுரோசா சாவினோ .








All the contents on this site are copyrighted ©.