2009-08-26 15:05:56

வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க மற்றும் இந்துமத குருக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்ப அரசு திட்டம்


ஆக.26,2009 இலங்கையின் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க மற்றும் இந்துமத குருக்களைகளையும் இன்னும் பலரையும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா அரசு நிர்வாகத் தலைவர் திருமதி பீ.எஸ்.எம் சார்ல்ஸ் இப்புதனன்று கூறினார்.

ஆறு கத்தோலிக்க குருக்கள், இரண்டு அருள்சகோதரிகள் இந்து மதகுருமார் மற்றும் பலப் பொது மக்கள் என 400 பேரை அம்முகாமிலிருந்து அனுப்பவுள்ளதாகவும், அவர்களில் சிலர் தங்கள் சொந்த இடங்களுக்கும் இன்னும் சிலர் அவர்களின் உறவினர்களிடமும் செல்லவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

விடுதலைப் புலிகளுடன் போர் முடிந்த பின்னர் அரசு முகாம்களுக்கு வந்த ஏறத்தாழ மூன்று இலட்சம் பேரில் சுமார் 800 இந்துசமயக் குருக்கள், ஆறு கத்தோலிக்க குருக்கள், இரண்டு அருள்சகோதரிகள் ஆகியோர் இருந்தனர் என்று அரசு கூறுகிறது.

போர் முடிந்த 180 நாட்களுக்குள் இந்த முகாம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக அரசு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுமாறு சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு வற்புறுத்தல்கள் வலுத்து வருகின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

 








All the contents on this site are copyrighted ©.