2009-08-26 15:04:20

மத்திய பிரதேச கிறிஸ்தவர்கள் இந்திய கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினத்தைக் கடைபிடித்தனர்


ஆக.26,2009 இந்த ஓராண்டு நினைவாக மத்திய பிரதேச மாநில பல்வேறு சபைக் கிறிஸ்தவர்கள் செப வழிபாடுகள் நடத்தி இரத்த தானம் செய்து இந்த இந்திய கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினத்தைக் கடைபிடித்தனர்.

போபால் சேவசதன் ஆலயத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நினைவு செப வழிபாட்டில் பல மட்டங்களிலிருந்து பல தரப்பு மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மத்திய பிரதேச இசை மகாசங்க மாவட்ட தலைவர், 52ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த இயேசுவின் சீடரான புனித தோமையாரும் இன்னும் பல கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர், திருச்சபை தங்கள் விசுவாசத்திற்காக உயிரிழந்த இந்த மறைசாட்சிகளின் குருதியின் மீது கட்டப்பட்டுள்ளது என்றார்.

கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், இவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தனர் என்றும் அவர் கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.