2009-08-26 15:07:44

சொமாலியாவில் பாதிப் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது


ஆக.26,2009 ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி என்றழைக்கப்படும் சொமாலியா நாட்டின் மொத்த மக்கட்தொகையில் பாதிப் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.

சொமாலியா எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடி பரவலானதாகவும் கடுமையானதாகவும் இருக்கின்றதெனக் கூறும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பிரிவு, அந்நாட்டில் ஏறத்தாழ 37 இலட்சத்து ஆறாயிரம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றுரைத்தது.

உலகிலே ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை அதிகம் எதிர்நோக்கும் நாடான சொமாலியாவில் இவ்விகிதம் 20 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உள்ளது.

ஐந்து வயதுக்குட்ப்பட்ட ஏறத்தாழ 3 இலட்சம் சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர். இவர்களில் 70 ஆயிரம் சிறார் இறப்பை எதிர்நோக்கும் அளவுக்கு இக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.