2009-08-26 10:21:13

காலக் கண்ணாடி ஆகஸ்ட் 26.


கி.மு. 55 ரோமையர்கள் ஜூலியஸ் சீசர் தலைமையில் பிரிட்டனோடு போர் தொடுத்தனர் .

1498 23 வயதுள்ள இத்தாலியச் சிற்பி மைக்கிள் ஆஞ்சலோ உலகப் புகழ்மிக்க வியாகுல அன்னை இறந்த இயேசுவை மடியில் கிடத்தியிருக்கும் சுரூபத்தை பளிங்குக் கல்லில் வடிக்கத் தொடங்கினார் . 1501 ல் அது முடிவடைந்தது . அந்தச் சுரூபம் தற்போது தூய பேதுரு பேராலத்தில் உள்ளது .

1676 ஆங்கிலப் பிரதமர் சர் ராபர்ட் வால்போல் பிறந்த நாள் .

1906 போலியோ மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஆல்பர்ட் சபின் பிறந்த நாள் .

1972 ஜெர்மனியின் மூனிக்கில் ஒலிம்பிக் ஆட்டம் தொடங்கியது .

1978 கர்தினால் ஆல்பினோ லூசியானி முதலாம் ஜான்பால் என்ற பெயரோடு திருத்தந்தையாகப் பதவி ஏற்றார் . 34 நாட்களே திருத்தந்தையாக இருந்த இவர் 65 வயதில் திடீரெனக் காலமானார் .








All the contents on this site are copyrighted ©.