2009-08-26 15:06:51

காங்கோவில் உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டவர்கள் மாண்புடன் நடத்தப்பட அழைப்பு


ஆக.26,2009 காங்கோ ஜனநாயக குடியரசில் உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வன்முறைக் குற்றவாளிகளுக்குத் தாங்கள் மாண்புடன் நடத்தப்படுவார்கள் என்பதற்கான உறுதி தேவைப்படுகின்றது என்று ஜெர்மன் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனப் பிரதிநிதி கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் ஹில்லரி கிளின்டன் அண்மையில் காங்கோவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது பாலியல் பலாத்காரத்திற்கு எதிராகப் பேசியது பற்றிக் குறிப்பிட்ட எய்ட் டு த ச்ர்ச் இன் நீட் நிறுவன ஆப்ரிக்கப் பிரிவின் தலைவர் கிறிஸ்டின் கூத்ரெ இவ்வாறு தெரிவித்தார்.

நம்புவதற்குக் கடினமான துயரங்களை எதிர்நோக்கிய காங்கோவின் கீவு பகுதிக்கு கிளின்டன் மேற்கொண்ட பயணத்தின் மூலம் அப்பகுதி மீண்டும் உலகினரின் கவனத்திற்கு உட்பட்டுள்ளது என்றும் கிறிஸ்டின் கூறினார்.

கடந்த ஆண்டில் கீவு கிழக்கு மாகாணத்தில் சுமார் 7500 கற்பழிப்புகளும் பாலியல் பலாத்காரங்களும் இடம் பெற்றுள்ளன என்ற அந்நிறுவன அறிவிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.