2009-08-20 12:47:55

இந்திய அரசுக்கு விழிப்புணர்வு தேவை .கத்தோலிக்கத் தலைவர்கள் .200809 .


அமெரிக்க மதச் சுதந்திர ஆய்வு நிறுவனம் இந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லை என அறிவித்துள்ளது இந்திய அரசுக்கு விழிப்புணர்வைத் தரவேண்டும் என இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள் .

அமெரிக்க மதச்சுதந்திர ஆய்வுக்கழகம் இந்தியாவுக்கு கறுப்புப் புள்ளி வைத்து மதச்சுதந்திரம் தரப்படாத நாடுகளில் ஒன்றாக இம்மாதம் 12 ஆம் தேதி தெரிவித்திருந்தது. சிறுபான்மை மதங்கள் தாக்கப்பட்டபோது இந்திய அரசு பாதுகாப்புத் தர தவறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. இது பற்றிக் கருத்து வெளியிட்ட கத்தோலிக்க ஆயர்கள்குழுவின் பிரதிநிதி தந்தை பாபு ஜோசப் இந்திய அரசு விழித்துக்கொண்டு சிறுபான்மை மதங்களைப் பின்பற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார். அகில இந்தியக் கிறிஸ்தவக் கழகத்தின் செயலர் ஜான் தயால் இந்திய நாட்டின் மனச்சான்றை விழித்தெழச் செய்து வலுக்குறைந்தவர்களையும் தாக்குதலுக்கு உள்ளாகின்றவர்களையும் அரசு பாதுகாக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகமும் இந்திய அரசு உரிமைகளைக் காக்கத் தவறுவதை முன்னரே தெரிவித்து கண்டித்துள்ளது. இந்திய இயேசு சபையின் மனித உரிமைக் கழகத் தலைவர் செட்ரிக் பிரகாஷ் சில மாநிலங்கள் சிறுபான்மை மக்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.