2009-08-18 14:49:07

வெனெசுவேலா நாட்டின் புதிய கல்விச் சட்டம் பள்ளிகளில் இருந்து மதக்கல்விப் போதனையை அகற்றும் அபாயத்தை முன்வைக்கிறது, அந்நாட்டு கர்தினால் சவினா


ஆக.18,2009 அண்மையில் வெனெசுவேலா அரசுத்தலைவரால் கையெழுத்திட்டு சட்டமாக்கப்பட்டுள்ள புதிய கல்விச் சட்டம் நாட்டின் பள்ளிகளில் இருந்து மதக்கல்விப் போதனையை அகற்றும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு கர்தினால் ஹோர்சே உரோசா சவினா தனது கவலையை வெளியிட்டார்.

வெனெசுவேலாவின் பாடத்திட்டங்கள் அனைத்தும் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் எனக் கூறும் புதிய கல்விச் சட்டம், மதக்கல்வியை குடும்பங்கள் வசம் ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட கர்தினால் உரோசா, இச்சட்டம் கடவுளைப் பள்ளிகளிலிருந்து அகற்றவில்லை, மாறாக மதத்தை அகற்ற முயற்சிக்கின்றது, அதுவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக் எனக் கவலையை வெளியிட்டார்

மதக்கல்வியைப் பள்ளிகளிலிருந்து அகற்றும் இப்புதிய கல்விச் சட்டம் அது குறித்த ஏனையவர்களின் கருத்துக்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவசரமாக ஒரே வாரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெனெசுவேலா எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதும் இங்கு குறிப்பிடதக்கது.








All the contents on this site are copyrighted ©.