2009-08-18 14:48:00

இலங்கையில் முகாம்களிலுள்ள மூன்று இலட்சம் தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், பேராயர் ரஞ்சித் அழைப்பு


ஆக.18,2009 இலங்கையில் அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என தலைநகர் கொழும்புவின் புதிய பேராயர் மால்கம் ரஞ்சித் அழைப்புவிடுத்தார்.

அன்னைமரியின் விண்ணேற்பு விழாவை முன்னிட்டு மடுமாதா திருத்தலத்தில் கூடியிருந்த மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு மறையுரையாற்றிய பேராயர் ரஞ்சித், இந்த மகிழ்ச்சியான நாளில் இன்னொரு பகுதி மக்கள் இதில் கலந்து கொள்ள முடியாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்தத் தனது கவலையை வெளியிட்டார்.

இதே திருவிழாவில் திருப்பயணிகளுக்கு உரையாற்றிய யாழ் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம், இம்மடுமாதா திருத்தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் கத்தோலிக்கர்கள் ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் கம்பி வேலிகளால் சூழப்பட்ட அரசு முகாம்களில் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் என்று கூறினார்.

இதற்கிடையே அண்மை பெருத்த மழையினால் இலங்கையின் மானிக் பாம் முகாமில் ஏறத்தாழ 1925 பாதுகாப்பிடங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன அல்லது சேதமாகியுள்ளன என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் அறிவித்தது.

 








All the contents on this site are copyrighted ©.