2009-08-18 14:47:06

இந்தியாவில் மாணவர்களிடையே மரம் நடும் ஆர்வத்தை வளர்த்து வரும் தலத்திருச்சபையின் பணி பிற பகுதிகளிலும் பரவி வருகின்றது


ஆக.18,2009. இந்தியாவின் மத்திய பகுதியில் மாணவர்களிடையே மரம் நடும் ஆர்வத்தை வளர்த்து வரும் தலத்திருச்சபையின் பணி பிற பகுதிகளிலும் பரவி வருவதாக யூக்கா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மத்திய பிரதேசத்தின் ஐம்பது கத்தோலிக்கப் பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தலத்திருச்சபையின் இத்திட்டம் அதே மாநிலத்தின் அனைத்து ஐந்நூறு கத்தோலிக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு மூன்றாண்டுகளுக்கு அதனை நீர், உரமிட்டு வளர்ப்பர்.

மரங்களைச் சரியான முறையில் பராமரிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் பாடத்தில் அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறுவர் என்று இத்திட்டத்தின் இயக்குனர் அருள்திரு ஆனந்த் முட்டுங்கல்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் அனைவரின் ஒன்றிணைந்த பொறுப்புணர்வு என்பதை நாம் மறக்காமல் வருங்கால சமுதாயம் நம்மை மன்னிக்காது என்ற அருள்திரு முட்டுங்கல், மரம் நடுதலின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதன் அவசியம் குறித்து அரசியல் தலைவர்களுக்கும் எழுதவுள்ளதாகவும் கூறினார்







All the contents on this site are copyrighted ©.