2009-08-16 19:48:37

ஆகஸ்ட் 17 . புனிதர் ஹயசிந்த் . 1185 – 1257 .170809.


இவர் போலந்து நாட்டினர் . புனித தோமினிக்கன் சபையில் துறவியானார் . 40 ஆண்டு காலமாக போலந்து , பொமரானியா , லித்துவேனியா ,டென்மார்க் , ஸ்வீடன் , நார்வே , ரஷ்யா ,உக்ரெய்ன் , திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நற்செய்தியை அறிவித்தார். கால்நடையாகவே சென்றார். வழியில் பல கொள்ளையர்கள் , கொடிய விலங்குகள் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருந்தது. இவர் வட ஐரோப்பாவின் மறைபோதகர் என அழைக்கப்படுகிறார் . போலந்து நாட்டின் கிராக்கோவில் 1257 ல் காலமானார். 1594 புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.