2009-08-15 13:51:49

ஆசியாவில் கிறிஸ்தவர்கள், தைரியத்துடனும் ஆர்வத்துடனும் மறைப்பணியில் ஈடுபட பேராயர் மெனாம்பரம்பில் அழைப்பு


ஆக.15,2009 ஆசியாவில் சிறுபான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்கள், தைரியத்துடனும் ஆர்வத்துடனும் மறைப்பணியில் ஈடுபட்டால் மட்டுமே அவர்கள் தங்கள் விசுவாசத்தை வாழ முடியும் என்று கூறினார் இந்தியப் பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில்.

மனிலாவில் நடை பெற்று வரும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் 9வது கூட்டத்தில் உரையாற்றிய குவாஹாத்தி பேராயர் மெனாம்பரம்பில், ஆசியக் கண்டத்தின் கிறிஸ்தவர்கள் தைரியத்துடன் நற்செய்தி அறிவிக்க அழைப்பு விடுத்தார்.

இந்த மறைப்பணியின் ஆன்மீக ஆதரவு திருநற்கருணையே என்றும் கூறிய பேராயர், வரையறையற்ற நம்பிக்கையுடன் கிறிஸ்துவை அறிவிக்கும் பொழுது அது சமுதாயத்தை மாற்றி எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும் கூறினார்.

ஆசியாவில் நற்செய்தி அறிவிப்பும் கிறிஸ்தவர்களின் பிரசன்னமும் இணைந்து செல்ல வேண்டும் என்றஉம் பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் கூறினார்.

இக்கூட்டத்தில் ஆசிய நாடுகளின் 137 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.