2009-08-14 17:47:59

இந்தியாவில் மதச் சுதந்திரம் பறிபோகிறது , ஆய்வு தெரிவிக்கிறது.140809.


அமெரிக்காவின் மதச் சுதந்திரக் கண்காணிப்புக் கழகம் இந்தியாவில் மதச் சுதந்திரம் பறிபோகிறது , அது காக்கப்படவேண்டும் என அறிவித்துள்ளது . 2008 ஆம் ஆண்டில் சிறுபான்மை மதத்தவர் முக்கியமாக கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டபோது இந்திய அரசு அதைத் தவிர்க்க ஆவன செய்யத் தவறிவிட்டதாகவும் இந்தியாவில் மதச் சுதந்திரத்துக்குத் தடை வந்துள்ளதாகவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 தேதியில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது . 2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர் கடுமையாக குஜராத்தில் தாக்கப்பட்டனர் . 1000 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர் . ஆப்கானிஸ்தான் , சோமாலியா , கியூபாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மதச் சுதந்திரம் பறிபோவதாக அமெரிக்காவின் அகில உலக மதச் சுதந்திரக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது . அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அரசு இந்திய அரசிடம் மதச் சுதந்திரத்தைக் காக்குமாறு அறிவுறுத்த மதச் சுதந்திரக் கண்காணிப்புக்கழகம் அவரிடம் பரிந்துரை செய்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்தக் கழகம் இப்படிப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிடுகிறது .








All the contents on this site are copyrighted ©.