2009-08-08 14:50:35

கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் தொடங்கியதன் முதலாமாண்டை கிறிஸ்தவர்கள் மிகுந்த அச்சத்தோடு எதிர்நோக்குகின்றனர், கட்டாக்-புவனேஷ்வர் பேராயர்


ஆக.08,2009 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் தொடங்கியதன் முதலாமாண்டு அண்மித்து வரும் வேளை கிறிஸ்தவர்கள் மிகுந்த அச்சத்தோடு அந்நாளை எதிர்நோக்குவதாக கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் வன்முறையின் மையமாக இருந்த கந்தமால் மாவட்டத்தில், கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தில் வேலை செய்யும் சிக்குசாகர் நாயக் என்பவர், கடந்த வியாழனன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் மிகுந்த பதட்டத்தோடு காணப்படுகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.

கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆண்டின் வன்முறையில் பாதிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனைகள் வழங்கிய பின்னர் அங்கிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த நாயக் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னும் கட்டுபடுத்தப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று பேராயர் சீனத் கூறினார்.

இந்துமதத் தலைவரும் அவரோடு சேர்ந்த நால்வரும் கொல்லப்பட்ட அடுத்த நாளான ஆகஸ்ட் 24ம் தேதி கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் தொடங்கின.








All the contents on this site are copyrighted ©.