2009-08-07 13:57:33

வெப்பநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து வருவதால் பசிபிக் தீவு நாடுகள் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர் நோக்குகின்றன


ஆக.07,2009 வெப்பநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து வருவதால் பசிபிக் தீவு நாடுகள் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர் நோக்கும்வேளை, மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்த நடவடிக்கைகளில் உடனடி மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று ஐ.நா. நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.

வெப்பநிலை மாற்றம் வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது என்று, ஆஸ்திரேலியாவின் கய்ரனில் 40 பசிபிக் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் கூட்டத்தில் ஐ.நா.வளர்ச்சித் திட்ட ஆசிய மற்றும் பசிபிக் பகுதிக்கான இயக்குனர் அஜய் சிஹிபெர் கூறினார்.

இப்பூமிப்பந்தின் வெப்பநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக பசிபிக் தீவு நாடுகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.