2009-08-07 13:55:44

இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல், செப மனிதர், கர்தினால் கொமாஸ்த்ரி


ஆக.07,2009. இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல், செப மனிதராக, திருச்சபையிலும் உலகிலும் இயேசுவுக்கு அதிக இடம் கொடுக்கப்பட வேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார் என்று கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி கூறினார்.

திருத்தந்தை ஆறாம் பவுல் இறந்ததன் 31ம் ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் பசிலிக்கா பேராலயத்தில் இவ்வியாழன் மாலை திருப்பலி நிகழ்த்திய, அப்பசிலிக்கா தலைமை குரு கர்தினால் கொமாஸ்த்ரி, திருத்தந்தை ஆறாம் பவுல் ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்லுமுன்னர் அவரது சிற்றாலயத்தில் முழந்தால் படியிட்டு நீண்ட நேரம் செபித்ததை நினைவுகூர்ந்தார்.

திருத்தந்தை ஆறாம் பவுல், நற்செய்திப்பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், அவர் 1970ம் ஆண்டு நவம்பரில் பிலிப்பீன்ஸ்க்குத் திருப்பயணம் மேற்கொண்ட போது கிறிஸ்து, ஆசிய மக்களின் மீட்பு ஆகிய இரண்டு முக்கிய தலைப்புகள பற்றிப் பேசியதையும் கர்தினால் குறிப்பிட்டார்.

அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1975ம் ஆண்டு உலகிற்கான நற்செய்திப்பணி பற்றிய அவரது சிந்தனைகள் குறிப்பிடும்படியானவை என்றும் கர்தினால் கொமாஸ்த்ரி கூறினார்







All the contents on this site are copyrighted ©.