2009-08-05 15:01:26

ரமோன் மாக்சாய்சாய் விருதை இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் ஆறு சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை நடவடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி பெறவுள்ளனர்


ஆக.05,2009 ஆசியாவின் நொபெல் விருது என்றழைக்கப்படும் இவ்வாண்டுக்கான ரமோன் மாக்சாய்சாய் விருதை இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் ஆறு சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை நடவடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி பெறவுள்ளனர்.

இவ்விருதைப் பெறும் ஆறுபேரில் ஒருவரான இந்தியாவின் தீப் ஜோசி என்பவர், நாட்டில் அரசுசாரா அமைப்பு திறம்பட செயல்படுவதற்குத் தனது சிறப்பான தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தால் உழைத்தவர்.

நல்ல நிர்வாகம், பொதுநல சேவை, குழு தலைமைத்துவம், பத்திரிகையியல், இலக்கியம், ஊடகக்கலைகள், அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு, இளையோர் முன்னேற்றம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

எத்தகைய வற்புறுத்தலுக்கும் துன்பத்துக்கும் அடிபணியாது வீரமுடன் செயலாற்றும் இந்த ஆறு பேரும் ஆசியாவின் உண்மையான வீரதீரர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளது

ரமோன் மாக்சாய்சாய் விருது வழங்கும் நிறுவனம்.

இந்தியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், மியான்மார் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஆறு பேரும் எடுத்துக்காட்டான தலைமைத்துவ வாழ்வை வாழ்பவர்கள் என்றும் அந்நிறுவனம் கூறியது.

1907 முதல் 1957 வரை பிலிப்பீன்ஸ் அரசுத் தலைவராக இருந்த ரமோன் மாக்சாய்சாய் பெயரில் இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

 








All the contents on this site are copyrighted ©.