2009-08-04 15:57:29

பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமூகம் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்தது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த அனுதாபம்


ஆக.04,2009 பாகிஸ்தானின் கோஜ்ரா நகரில் கிறிஸ்தவ சமூகம் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்தது குறித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாய்சலாபாத் ஆயருக்கு அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் அனுதாபங்களை வெளியிட்டு திருப்பீடச் செயலர் கர்திநால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயால் பாகிஸ்தான் ஆயர் ஜோசப் கூட்சுக்கு அனுப்பப்பட்டுள்ள இத்தந்திச் செய்தி, பலியானவர்களின் குடும்பங்களுக்கான திருத்தந்தையின் அனுதாபங்களையும் பாதிக்கப்பட்டவர்களுடனான அவரின் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கிறது.

கிறிஸ்தவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் பாகிஸ்தான் நாட்டில் ஒருவர் மற்றவர் மீதான மதிப்புடனும் மத மற்றும் மனிதகுல மதிப்பீடுகளுடன் மீதான நம்பிக்கையுடனும் நாட்டைக் கட்டி எழுப்புவதில் கிறிஸ்தவர்களின் ஈடுபாட்டை, அவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் குறைக்காதிருக்கும் வண்ணம் அவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டுமெனவும் பாகிஸ்தான் ஆயர்களை அத்தந்திச் செய்தியில் திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.