2009-08-01 14:49:55

சர்வதேச குருக்கள் கருத்தரங்கு உரோமில் 2010ம் ஆண்டு ஜூன் 9 முதல் 11 வரை நடைபெறும்


ஆக.,01,2009. சர்வதேச குருக்கள் ஆண்டின் நிறைவையொட்டி உரோம் நகரில் 2010ம் ஆண்டு ஜூன் 9 முதல் 11 வரை குருக்களுக்கான சர்வதேச கருத்தரங்கு நடைபெறும் என்று திருப்பீட குருக்கள் பேராயம் அறிவித்துள்ளது.

உரோம் புனித பவுல் பசிலிக்காவில் ஜூன் 9ம் தேதி தொடங்கும் இச்சர்வதேச கருத்தரங்கு, கிறிஸ்துவின் பிரமாணிக்கம், குருக்களின் பிரமாணிக்கம் என்ற தலைப்பில்

நடைபெறும் என்றும் அப்பேராயம் அறிவித்தது.

இதனை நடத்தும் பொறுப்பு, ஓப்பெரா ரொமானோ பெல்லெகிரினாஜ்ஜி என்ற வத்திக்கான் சுற்றுலா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேய்ப்புப்பணி சுற்றுலா மற்றும் திருப்பயணத் திருப்பணி வழியாக நற்செய்தி அறிவிப்பது இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

மேலும், ஆர்ஸ் நகரில் ஆகஸ்ட் 4ம் தேதி சிறப்பிக்கப்படும் புனித மரிய வியான்னி அருளப்பரின் விழாவில் திருத்தந்தையின் பிரதிநிதியாகத் திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் கிளவ்தியோ ஹூயூம்ஸ் கலந்து கொள்கிறார்.

பங்குக் குருக்களின் பாதுகாவலராகிய புனித மரிய வியான்னி அருளப்பர் இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டு சர்வதேச குருக்கள் ஆண்டை திருத்தந்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.