2009-07-31 15:20:55

வரலாற்றில் ஆகஸ்ட் 01 புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார்


இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் 1696ம் ஆண்டு பிறந்து அரசியல் சட்டத்திலும் திருச்சபை சட்டத்திலும் முனைவர் பட்டம் பெற்ற அல்போன்ஸ் மரிய லிகோரியார், நேப்பிள்ஸ் நகரின் ஆயராகவும் பணியாற்றினார். ஆண்களுக்கென இரட்சகர் சபையையும் தோற்றுவித்தார். பார்வையிழந்தவராய், பல நோய்களால் தாக்கப்பட்டாராய், சூழ்ச்சிகளால் ஏமாற்றப்பட்டவராய், தப்பெண்ணத்தால் தன் சபையிலிருந்தே தள்ளி வைக்கப்பட்டவராய் அனைத்துத் துன்பங்களையும் இவர் பொறுமையுடன் ஏற்றார். 1787ம் ஆண்டு ஆகஸ்ட் 01ம் தேதி இறைபதம் அடைந்தார் புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார்.

ஆகஸ்ட் 01, 1834 ல் பிரித்தானிய பேரரசில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.

1920ல் இந்திய தலைவர்களுள் ஒருவரான பால கங்காதர் திலக் இறந்தார்.

1967 ல் இஸ்ரேல், கிழக்கு எருசலேமை தன்னோடு இணைத்துக் கொண்டது.








All the contents on this site are copyrighted ©.