2009-07-31 15:10:47

அணுஆயுதங்கள் அழிக்கப்படுமாறு பால்டிமோர் பேராயர் எட்வின் ஒபிரைன் அழைப்பு


ஜூலை31,2009. உலகில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள அணுஆயுதங்கள் அழிக்கப்படுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு பால்டிமோர் பேராயர் எட்வின் ஒபிரைன் அழைப்புவிடுத்தார்.

ஒமாஹாவில் அமெரிக்க இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 500 பேருக்கு உரையாற்றிய பேராயர் ஒபிரைன், அணுஆயுதங்களை ஒழிப்பது, அடிப்படையான நன்னெறி மதிப்பீட்டு விவகாரமாகும் என்று கூறினார்.

இந்நன்னெறி மதிப்பீடுகள், நாட்டினர் அனைவரையும் கருத்துக் கோட்பாட்டு எல்லைகளையும் இணைக்க வேண்டும் என்றும் உரையாற்றிய அவர், சில நாடுகள் அணுஆயுதங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ள இந்நாட்களில் உலகமும் அதன் தலைவர்களும் அணுஆயுதங்களற்ற உலகை சமைப்பதில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார்.

2010ம் ஆண்டில் நடைபெறவுள்ள, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் கொண்டு வருவது பற்றிய ஐ.நா.கருத்தரங்கிற்கு வத்திக்கான் ஆதரவு வழங்குவதையும் பால்டிமோர் பேராயர் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.