2009-07-30 14:41:28

வரலாற்றில் ஜூலை 31 புனித லொயோலா இஞ்ஞாசியார்

 


இயேசு சபையை நிறுவிய புனித லொயோலா இஞ்ஞாசியார் விழா. இனிகோ என்ற இஞ்ஞாசியார் 1491ம் ஆண்டு முதல் 1556ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். பாம்பலூனா கோட்டையையும் தம் அரண்மனையையும் பிரான்ஸிடமிருந்து காப்பாற்றும் போர்க்கால நிலையிலே இவரது இளமை காலம் கழிந்தது. ஒருசமயம் எதிரியின் பீரங்கி பாம்பலூனா கோட்டையைத் தாக்கியதில் அது இனிகோவின் காலையும் துளைத்தது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு மற்றும் புனிதர்களின் வரலாறு பற்றிய புத்தகங்களை ஆழ்ந்து வாசித்தார். இறைவனின் அதிமிக மகிமைக்காக உழைக்க வேண்டும் என்ற அசைக்கமுடியாத குறிக்கோளுடன் அவரது வாழ்க்கை புதிய பாதை நோக்கிப் பயணமானது.

904 – தெசலோனிக்கா நகரை அராபியர்கள் கைப்பற்றி அதனை அழித்தனர்.

1009 – திருத்தந்தை நான்காம் செர்ஜியுசுக்குப் பின்னர் திருத்தந்தை பதினெட்டாம் யோவான் 142 வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார்.

1498 - கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கத்திய பகுதிக்கான தனது மூன்றாவது பயணத்தின் போது டிரினிடாட் தீவைக் கண்டுபிடித்தார்.

1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.

1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.








All the contents on this site are copyrighted ©.