2009-07-30 20:06:26

புனித அல்போன்சாவின் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.3007.


இந்தியாவின் முதல் புனிதை அல்போன்சா முட்டத்துப்படத்துவின் விழா கேரளத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது . 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் விழாவில் கலந்து கொண்டதாகச் செய்திகள் தெரிவி்க்கின்றன. புனிதை அல்போன்சாவின் திருத்தலம் கேரளத்தின் பரணஞானத்தில் இருக்கிறது . சென்ற ஆண்டு அக்டோபர் 12 தேதியில் முத்திபெற்றவராக இருந்த அல்போன்சாவுக்கு புனிதை என்ற பட்டம் வழங்கப்பட்டது . புனிதை அல்போன்சாதான் கத்தோலிக்கத் திருச்சபையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்திய மண்ணில் பிறந்த முதல் புனிதையாவார் . ஜூலை 28 தேதியில் அவருடைய விழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது . விழா நாள் சிறப்புத் திருப்பலியில் பாலை மறைமாவட்ட ஆயர் ஜோசப் காலரங்காட் தலைமை ஏற்று வழிபாட்டை நடத்தியிருக்கிறார் . சீரோ மலபார் ரீதி திருச்சபையைச் சேர்ந்த கர்தினால் வித்யாத்திலும் திருப்பலியில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருக்கிறார் .








All the contents on this site are copyrighted ©.