2009-07-30 20:03:38

புதிய கருச்சிதைவுச் சட்டம் சட்டத்துக்குப் புறம்பானது கர்தினால். 3007


புதிய கருச்சிதைவுச் சட்டம் அரச சாசனத்துக்குப் புறம்பானது என்கிறார் இஸ்பானியாவின் கர்தினால் .

குழந்தைப் பேறுபற்றியும் ஒருவர் விருப்பப்படி கருச்சிதைவை அமலாக்கம் செய்வது பற்றியும் புதிய சட்டம் இயற்ற விவாதம் செய்வது அரச சாசனத்துக்கு எதிரானது என்று இஸ்பானியாவின் ஆயர்குழுவின் தலைவர் கர்தினால் அந்தோனியோ மரிய ரோக்கோ வரேலா சென்ற வெள்ளிக்கிழமை தெரிவி்த்துள்ளார் . கோடைக்காலத்தில் பல்கலைக் கழகத்தின் வகுப்புக்கள் முடியும்போது உரை நிகழ்த்திய கர்தினால் ரோக்கோ சட்டத்தை ஆழமாகப் படித்துள்ள அவருடைய கருத்தாய்வுப்படி கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் புதிய சட்டங்கள் விதிமுறைகளுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.