2009-07-29 13:17:47

ஆசிய ஆயர்கள் திருநற்கருணை பற்றி சிந்திக்கவுள்ளனர்


ஜூலை28,2009 “ஆசியாவில் திருநற்கருணையை வாழ்தல்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 10 முதல் 16 வரை பிலிப்பின்ஸ் தலைநகரில் ஆசிய ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பு கூடி விவாதிக்கவுள்ளது.

அண்மை திருச்சபை படிப்பினைகளின் அடிப்படையில் விவாதிக்கவுள்ள இந்த ஒன்பதாவது நிறையமர்வுக் கூட்டத்தில் 120 உயர்மட்ட அதிகாரிகள் பங்கு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடவுள் நம்முடன் பேசுவது அதற்கு நம் பதிலுரை என்பதாக நற்கருணை வாழப்படுவது குறித்து ஆசிய ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பு விவாதிக்கும் போது சமூகத்தில், விசுவாசத்தில், அன்பில், நம்பிக்கையில், மேய்ப்புப்பணியில் வாழ்வது குறித்தும் கலந்துரையாடல்கள் இடம் பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் தலைநகர் மனிலாவில் ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கும் இக்கலந்துரையாடலைத் திருத்தந்தையின் சார்பில் கர்தினால் பிரான்சிஸ் அரின்சே தொடங்கி வைப்பார்.








All the contents on this site are copyrighted ©.