2009-07-27 15:01:24

வியட்நாமில் ஐந்து இலட்சம் கத்தோலிக்கர் ஊர்வலம்


ஜூலை27,2009 வியட்நாம் போர் காலத்தின் போது குண்டுவீசி தாக்கப்பட்ட தலத்திருச்சபை நிலத்தில் வழிபாடு நடத்துவதற்கு வியட்நாம் அரசு விதித்திருக்கும் தடையை எதிர்த்து இஞ்ஞாயிறன்று ஐந்து இலட்சம் கத்தோலிக்கர் ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் ஒரு சமயப் போராட்டம் நடத்தப்பட்டது வியட்நாமின் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

ஞாயிறன்று காலை உள்ளூர் நேரம் ஏழு மணிக்கு 170 குருக்கள், 420 அருள்சகோதரிகள் மற்றும் ஐந்து இலட்சம் பொதுநிலை கத்தோலிக்கர் கலந்து கொண்ட இப்போராட்டத்தின் போது ஒவ்வொரு பங்குத்தளக் கோவிலின் வெளியேயும் கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவதற்கு எதிரான கண்டன அறிக்கைகள் ஒட்டப்பட்டிருந்தன.

கடந்த வாரம் திங்களன்று அடித்து துன்புறுத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்ட ஏழு பொதுநிலை கத்தோலிக்கரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற அட்டைகளையும் இவ்வூர்வலத்தினர் தாங்கியிருந்தனர்.








All the contents on this site are copyrighted ©.