2009-07-27 15:00:11

பத்தரிகை துறையினர் காரித்தாஸ் இன் வெரித்தாத்தேயில் நம்பிக்கையின் செய்தியைக் காணுகின்றனர், திருப்பீடப் பேச்சாளர்


ஜூலை27,2009 திருத்தந்தையின் அண்மை சுற்றுமடலான காரித்தாஸ் இன் வெரித்தாத்தேயில் நம்பிக்கையின் செய்தியைக் காணும் பத்தரிகை துறையினர் அதற்குத் தொடர்ந்து அதிமுக்கியத்துவம் கொடுத்து வருவதாக திருப்பீடப் பேச்சாளர் அருள்திரு பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.

வத்திக்கான் தொலைக்காட்சியின் ஒக்டாவா தியெஸ் என்ற நிகழ்ச்சியில் இதனை எடுத்துரைத்தத் திருப்பீடப் பேச்சாளர் திருத்தந்தையின் இச்சுற்றுமடல் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கப்படுவதுடன் பல்வேறு விளக்கங்களையும் தந்து வருகிறது என்றார்.

வளர்ச்சி என்பது மனிதனுக்குப் பயன்பட வேண்டும் என்றால் அந்த மனிதன் என்பவன் யார் என்ற கேள்வி தற்போது பலமாக எழுப்பப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.

வாழ்வு பாதுகாக்கப்படல், பாலின நடவடிக்கை மற்றும் குடும்பம் பற்றிய கண்ணோட்டம் போன்றவைகளில் திருத்தந்தை இன்றைய நவீனகாலப் போக்குகளுக்கு எதிராகத் துணிவுடன் கருத்துக்களை வெளியிட்டுள்ளது இச்சுற்றுமடல் மூலம் தெரிகின்றது எனவும் அவர் கூறினார்.

மனிதனின் நலனுக்காகப் பணிபுரிவதற்கான சிறந்தவழி அவனைப் பற்றிய நல் கண்ணோட்டத்தை உலகுக்கு வழங்குவதே என்பதில் திருச்சபை உறுதியாக உள்ளது எனவும் திருப்பீடப் பேச்சாளர் அருள்திரு பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்







All the contents on this site are copyrighted ©.