2009-07-25 14:33:21

விவிலியப் பிரதிகளை விநியோகம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவப் பெண் ஒருவரை வட கொரியா தூக்கிலிட்டு கொன்றுள்ளது.


ஜூலை25,2009. விவிலியப் பிரதிகளை விநியோகம் செய்தார், இன்னும், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் தென் கொரியாவின் ஒற்றராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவப் பெண் ஒருவரை வட கொரியா கம்யூனிச பொதுவில் தூக்கிலிட்டு கொன்றுள்ளது.

மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்கள் பற்றி விசாரிக்கும் குழுவைச் சேர்ந்த தென் கொரிய மனித உரிமை நடவடிக்கையாளர்கள் இவ்வெள்ளியன்று இச்செய்தியை வெளியிட்டனர்.

33 வயதாகும் ரி ஹியோன்-ஓக் என்ற பெண் கடந்த ஜூன் 16ம் தேதி ரியோங்சோன் நகரில் தூக்கிலிட்டார், அதற்கு அடுத்த நாள் ஹோயர்யோங் நகரிலுள்ள அரசியல் கைதிகளுக்கான முகாமில் அப்பெண்ணின் பெற்றோர், கணவன் மற்றும் பிள்ளைகள், அடைத்து வைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.

வடகொரியாவில் மதத்தைக் கடைபிடிப்பதற்கு அனுமதி இருக்கின்ற போதிலும், கைதுகள், பொதுவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றல் மற்றும்பிற அச்சமூட்டும் செயல்கள் மூலம் அரசு மதத்திற்கெதிரான போரை நடத்தி வருகின்றது என்றும் அம்மனித உரிமை நடவடிக்கையாளர்கள் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.