2009-07-24 17:30:10

அமெரிக்க அருள்சகோதரிக்கு வத்திக்கானின் உயர் விருது. 240709.


அமெரிக்காவின் மீஷிகன் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரி ஷாரண் ஹாலந்து திருச்சபைக்காகவும் பாப்பரசரின் சிலுவைக்காகவும் என்ற புரோ எக்லேசியா மற்றும் பொண்டிபீச்சே கிராஸ் என்ற விருதைப் பெற்றுள்ளார் . அவர் மரியன்னையின் திரு இருதய சபையைச் சேர்ந்த அருள் சகோதரி . திருச்சபைச் சட்டங்களில் தேர்ச்சி பெற்றவர் . அவர் வத்திக்கான் மன்றம் ஒன்றின் தலைவராக இருந்த முதல் மகளிராவார் .வத்திக்கானின் துறவற வாழ்வின் மன்றத்திலும் அப்போஸ்தலிக்க மன்றத்திலும் 21 ஆண்டுகள் பணி செய்திருக்கிறார் . திருச்சபைக்கு அவர் புரிந்த அருஞ்சேவைக்காக கர்தினால் பிராங்க் ரோட் அவருக்கு வத்திக்கானின் விருதை ஜூன் மாதம் 26 ஆம் தேதி வழங்கினார் . ஏப்ரல் மாதம் அமெரிக்கக் கத்தோலிக்க ஆணையகம் அமெரிக்காவின் துறவற சபைகளின் வெற்றி வீரர் என்ற பதக்கத்தை வழங்கிப் பெருமைப்படுத்தியிருந்தது . 2007 ஆம் ஆண்டு ஜமெய்க்காவின் தூய யோவான் பல்கலைக்கழகம் அவருக்கு மிகச் சிறந்த திருச்சபைச் சட்ட வல்லுநர் என்றும் துறவியர்களுக்கு எடுத்துக்காட்டு எனவும் கூறி பதக்கம் வழங்கிப் பெருமைப் படுத்தியது .








All the contents on this site are copyrighted ©.