2009-07-23 14:16:41

வரலாற்றில் ஜூலை 24


தவமுனிவரான புனித ஷார்பெல் மக்லுஃப் விழா. ஜோஸ்ஸரூன் மக்லுஃப் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1828ம் ஆண்டில் லெபனன் நாட்டில் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். இவர் சிறுவயதிலிருந்தே தனிமையை நாடி செபத்தில் ஆர்வமாய் இருந்ததால் அவரின் வளர்ப்புத் தந்தைக்கு அவரது இப்பழக்கம் பிடிக்கவில்லை. எனவே இவர் தனது 23வது வயதில் யாருக்கும் தெரியாமல் வெளியேறி மாய்ஃபுக் என்ற துறவுமடத்தில் ஒளிந்து கொண்டார். பின்னர் அத்துறவு மடத்தில் சேர்ந்த போது ஷார்பெல் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். பாலைவன தவமுனிவர்களைப் பின்பற்றும் ஆவலில் 1875ம் ஆண்டில் தனிமையை நாடி காட்டிற்குச் சென்று தவமுனிவரானார். இவர் தமது வாழ்வின் இறுதிக் காலத்தில் ஒருசமயம் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் எழுந்தேற்றத்திற்குச் சற்றுமுன் கீழே விழுந்தார். இதன்பின்னர் எட்டு நாள்கள் நோயினால் துன்புற்று இறந்தார். அன்று முதல் இன்றுவரை இவரிடம் வேண்டுவதன் மூலம் பக்தர்கள் பல நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.

1823 – சிலே நாட்டில் அடிமைத்தனம் அகற்றப்பட்டது.

1969 அப்போல்லோ11 விண்கலம் பத்திரமாக பசிபிக் பெருங்கடலில் இறங்கியது.

1991 - இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது








All the contents on this site are copyrighted ©.