2009-07-22 14:00:49

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்தவ மனித உரிமை நடவடிக்கையாளர் விடுதலை செய்யப்பட கிறிஸ்தவர்கள் கோரிக்கை


ஜூலை22,2009. இலங்கையில் அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்தவ மனித உரிமை நடவடிக்கையாளர் விடுதலை செய்யப்பட வேண்டுமென கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இடம் பெற்ற போராட்டத்திற்கு கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

உலக கிறிஸ்தவ சபைகள் அவை நடத்திய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்குப் போகவிருந்த 63வயதாகும் சிங்களவரான ஷாந்தா பெர்ணான்டோ என்பவர் கொழும்பு விமான நிலையத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலன்விசாரணை பிரிவிடம் கையளிக்கப்பட்டார்.

நாட்டின் அரசுத்தலைவர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நன்மதிப்பைக் குறைக்கும் விவரங்களை அவர் கொண்டு சென்றார் என்று காவல்துறை குற்றம் சாட்டும் வேளை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி அகதிகள் நிலைமை தொடர்புடைய விவரங்களை அவர் வைத்திருந்தார் என்று ஊடகங்கள் அறிவிக்கின்றன.

இலங்கை தேசிய கிறிஸ்தவ அவையின் நீதி் மற்றும் அமைதி ஆணையத்தின் செயலரான பெர்னாண்டோ இம்மாதம் 15ம் தேதி நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது அவ்வளாகத்தில் கத்தோலிக்க குருக்கள், அருள்சகோதரிகள் உட்பட நூற்றுக்கணக்கான மனித உரிமை நடவடிக்கையாளர்கள் கூடியிருந்து அவருடனான தங்கள் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தனர்.

மேலும், 25 வருட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும், நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்க்குமென அந்நாட்டிற்கு 250 கோடி டாலர் நிதியுதவி வழங்குவதற்குத் திட்டமிட்டு வருகிறது சர்வதேச நிதியகம்








All the contents on this site are copyrighted ©.