2009-07-22 13:56:09

அவசரகாலச் சூழல்களிலும்கூட ஒவ்வொரு மனிதனின் மாண்பு மதிக்கப்பட வேண்டும், வத்திக்கான் பிரதிநிதி வலியுறுத்தல்


ஜூலை22,2009 போர் அல்லது இயற்கைப் பேரிடர்கள் காரணமாக ஏற்படும் அவசரகாலச் சூழல்களிலும்கூட ஒவ்வொரு மனிதனின் மாண்பு மதிக்கப்பட வேண்டுமென ஜெனிவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான வத்திக்கான் பிரதிநிதி வலியுறுத்தினார்.

சுதந்திரம், வேலை, குடும்பம் சேர்ந்து வாழ்தல், கல்வி, சுயவளர்ச்சி ஆகியவற்றுக்கான உரிமைகளும் மற்றும்பிற மனித உரிமைகளும் அவசரகாலஙகளிலும் வெறுமனே புறக்கணிக்கப்படக் கூடாது என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக அவையின் மனிதாபிமான விவகாரப் பிரிவு நடத்திய கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய பேராயர் தொமாசி, இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகளாவிய மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு உறுதி வழங்கப்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

உலகிலுள்ள அகதிகள் முகாம்களில் வாழும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற வத்திக்கானின் அழைப்பையும் அந்த ஐ.நா.கூட்டத்தில் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.

மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதில் தெளிவான விதிமுறைகள் கொண்டுவரப்படுமாறும் சர்வதேச சமுதாயத்தை வலியுறுத்தினார் வத்திக்கான் பிரதிநிதி

பேராயர் தொமாசி.








All the contents on this site are copyrighted ©.