2009-07-21 15:08:52

கத்தோலிக்கரின் விசுவாசத்தையும் ஐக்கியத்தையும் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம், காண்டுவா புதிய ஆயர்


ஜூலை 21,2009 இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தன் மறைமாவட்ட பகுதியில் விசுவாசத்தை மக்களிடையே கட்டி எழுப்ப வலியுறுத்துவதே தன் தலையாய பணியாயிருக்கும் என இந்தியாவின் காண்டுவா மறைமாவட்டத்தின் புதிய ஆயரான அலங்காரம் ஆரோக்ய செபஸ்டியான் துரைராஜ் கூறினார்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்திணங்கிச் சென்றாலன்றி முன்னோக்கிச் செல்ல முடியாது என்ற ஆயர் அலங்காரம், கத்தோலிக்கரின் விசுவாசத்தையும் ஐக்கியத்தையும் பலப்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.

வேலைவாய்ப்பின்மையால் ஏழைகள் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்வதைத் தடுக்கும் நோக்குடன் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தை ஊக்குவிக்கவுள்ளதாகக் கூறிய ஆயர், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்துறை இதற்கு உதவுவதாக இருக்குமெனவும் தெரிவித்தார்.

இன்றைய நவீன கல்வி, பூர்வீகக் குடிமக்களின் கல்வி மற்றும் கலாச்சாரத்தை அழுவுக்குள்ளாக்கி வருவது குறித்த கவலையும் அவரால் வெளியிடப்பட்டது.

காண்டுவா மறைமாவட்டத்தின் புதிய ஆயரான அலங்காரம் இறைவார்த்தை துறவு சபையைச் சேர்ந்தவர் மற்றும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.








All the contents on this site are copyrighted ©.