2009-07-18 16:09:38

ஜூலை 20 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


புனித அப்போலினாரிஸ் விழா. இரண்டாவது நூற்றாண்டில் அருட்பணி புரிந்து வந்தவர்களில் தலைசிறந்த ஆயர் இவர். கொடுங்கோல் மன்னன் மார்ககுஸ் அவுரேலியுஸ் முன்னிலையில் தைரியமாக இறைக்கட்டளைகளை எடுத்துச் சொன்னதின் பொருட்டு வீரவிசுவாசப் போதகர் என்ற அடைமொழி ஆயர் அப்போலினாரிசுக்குத் தரப்பட்டது. இவர் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார்.

514 திருத்தந்தை சிம்பவெருசுக்குப் பின்னர் புனித ஹோர்மிஸ்தாஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1956 பிரான்ஸ் டுனிசியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது.

1960 ஸ்ரீமா பண்டாரநாயக்கெ இலங்கையின் முதல் பெண் பிரதமரானார்.

1974 துருக்கி, சைப்ரசை ஆக்ரமித்தது.

1989 பர்ம அரசு ஆங் சான் சு கியை வீட்டுக் காவலில் வைத்தது.

2005 ஒரே பாலினத் திருமணத்தை அனுமதித்த நான்காவது நாடாக கானடா மாறியது.








All the contents on this site are copyrighted ©.