2009-07-18 15:52:49

இலங்கையின் பாதுகாப்புக்கான செலவு அதிகரிக்கவுள்ளது


ஜூலை18,2009. இலங்கையின் பாதுகாப்புக்கான இவ்வாண்டுக்கான செலவு இருபதாயிரம் கோடி ரூபாயை எட்டவுள்ளதாகவும் இது, அரசின் இவ்வாண்டுக்கான மொத்த செலவில் ஏறத்தாழ 17 விழுக்காடு எனவும் ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டில் இராணுவத்திற்கென 16 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும், தமிழ் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கென 17 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்குப் பாதுகாப்பு அமைச்சகம் விண்ணப்பித்திருந்ததாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இராணுவம் மற்றும் காவல்துறைக்கான ஆட்களின் எண்ணிக்கை 2006ம் ஆண்டில் 1,10,000 ஆகவும், அது கடந்த ஆண்டில் 2,40,000 ஆகவும் இவ்வாண்டில் அது 3,50,000 ஆகவும், அடுத்த ஆண்டில் இன்னும் 50, 000 பேர் அதிகமாகச் சேர்க்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் கல்விக்கென மொத்தத்தில் 4,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுளஅளது.

உலக வங்கியின் கணிப்புப்படி இலங்கையின் 2 கோடிப் பேரில் 25 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.

 








All the contents on this site are copyrighted ©.