2009-07-17 17:22:16

ஹொண்டூராவின் முந்நாள் தலைவரை வன்மையாக விமர்சிக்கிறார் கர்தினால்.

170709


ஹொண்டூராவின் பதவி நீக்கப்பட்ட முந்நாள் தலைவரை வன்மையாக விமர்சிக்கிறார் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீயகா .

கார்தினல் ஆஸ்கர் மாராடீகா ஹொண்டூராவில் உள்ள டெகுசிப்பாலாவின் பேராயர் . அவர் இஸ்பானிய செய்தித்தாள் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் பதவி நீக்கப்பட்ட அந்நாட்டின் முந்நாள் தலைவர் மானுவேல் செலாயா நன்னெறிப்படியோ சட்டப்படியோ நாட்டில் எந்த அதிகாரமும் இல்லாதவர் . சட்டங்களை அவர் மீறியதால் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொண்டார். அவருடைய பேச்சில் பொய்களே நிறைந்திருந்ததால் நன்னெறிப்படியும் தலைவராக இருக்கமுடியாது . நாட்டுப்பற்றிருந்தால் அவர் செய்யக் கூடியதெல்லாம் நாட்டுக்கு வெளியே இருப்பதாகும் எனவும் , மற்ற அனைத்தும் வெனீசுலா நாட்டுத்தலைவர் கியோகோ சாவசின் தவறான கொள்கைகளைத் திணிக்க முயல்வதாகும் எனவும் கர்தினார் மாராடீயகா தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.