2009-07-17 17:24:52

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாலிபான் அச்சுறுத்தல்.170709.


பாகிஸ்தானில் தாலிபான் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் நடத்தி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன . பாகிஸ்தான் அரசு நாட்டின் வடக்கே ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான் இயக்கத்தை அழிக்கப் போர் தொடுத்து வருகிறது . ஆனால் தலிபான் இயக்கத்தினர் கிறிஸ்தவ மக்களுக்கும் மற்ற சிறுபான்மை மதத்தவர்க்கும் எதிராக அவர்களுடைய நிறுவனங்களை நாடு முழுவதும் தாக்கி வருவதாக பீடஸ் என்ற செய்தி நிறுவனம் கூறுகிறது . நாட்டைவிட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தல் கடிதங்கள் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன .








All the contents on this site are copyrighted ©.